அமெரிக்க சி.ஐ.ஏ. அதிகாரிக்கு மர்ம நோய்

அமெரிக்க சி.ஐ.ஏ. அதிகாரிக்கு மர்ம நோய்

இந்தியா வந்து சென்றவர்

அமெரிக்க புலனாய்வு அமைப்பான சிஐஏ இயக்குநர் வில்லமியம் பர்ன்ஸ் சமீபத்தில் இந்தியா வந்தார். அப்போது, அவருடன் வந்த அதிகாரி ஒருவரிடம் ஹவானா என்னும் மர்ம நோயின் அறிகுறி கண்டறியப்பட்டது. இது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

கியூபா தலைநகர் ஹவானாவில் அமெரிக்கா, கனட தூதரகங்களை சேர்ந்தவர்களுக்கு கடந்த 2016ஆம் ஆண்டில் மர்ம நோய் அறிகுறிகள் தென்பட்டன. அந்த அறிகுறிகளுக்கு தலைநகரின் பெயரிலேயே ஹவானா அறிகுறிகள் என பெயரிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.