பிரேசில் அதிபர் மீது விசாரணை தொடக்கம்

பிரேசில் அதிபர் மீது விசாரணை தொடக்கம்

ஆரம்பத்திலிருந்தே கொரோனோ தடுப்பூசி குறித்து சந்தேகம் எழுப்பிவந்த பிரேசில் அதிபர் ஜெயிர் பொல்சொனோரா சமீபத்தில்  தடுப்பூசியை எய்ட்ஸ் நோயுடன் ஒப்பிட்டு கருத்து கூறினார்.

அதாவது தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களுக்கு எய்ட்ஸ் வருவதற்கான சாத்தியக்கூறு அதிகம் இருப்பதாக கடந்த அக்டோபர் 24ஆம் தேதி அவர் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டிருந்தார்.

இவ்வாறு பொய்யான செய்தியை பரப்பியதற்காக அதிபரின் பேஸ்புக் மற்றும் யூடியூப் கணக்குகளை அந்நிறுவனங்கள் முடக்கி வைத்தன. இந்நிலையில் தடுப்பூசி குறித்து ஆட்சேபத்துக்குரிய கருத்தை முன்வைத்ததற்காக பிரேசில் சுப்ரீம் கோர்ட்டில் அதிபர் மீது விசாரணை தொடங்கியுள்ளது.