பார்பிக்யூ தயாரிக்கும் கருவி விற்பனைக்கு தடை

பார்பிக்யூ தயாரிக்கும் கருவி விற்பனைக்கு தடை

லண்டனில் ஏற்கனவே கடும் வெப்பம் நிலவி வருகிறது. இந்த சமயத்தில் பார்பிக்யூ போன்ற பொதுவெளியில் சமைக்கப்படும் சிக்கன்களால், ஆங்காங்கே தீ விபத்து ஏற்படும் அபாயம் நீடிக்கிறது. லண்டனை பொருத்தமட்டில் மார்க்ஸ் அண்ட் ஸ்பென்சர் என்னும் நிறுவனம் பார்பிக்யூ சிக்கன் தயாரிப்பு கருவி விற்பனையில் கொடி கட்டி பறக்கிறது. இந்த நிலையில் ஏற்கனவே நிலவும் கோடை வெப்பத்தை கருத்தில் கொண்டு தற்காலிகமாக பார்பிக்யூ தயாரிப்பு கருவி விற்பனையை நிறுத்தி வைக்க மார்க் அண்ட் ஸ்பென்சர் நிறுவனம் முடிவு செய்துள்ளது.