ஒரு வாரத்துக்கு விமான சேவை ரத்து

ஒரு வாரத்துக்கு விமான சேவை ரத்து

பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் அறிவிப்பு

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து தினந்தோறும் ஏராளமான விமானங்கள் பிரிட்டனின் ஹீத்ரோ விமான நிலையத்துக்கு இயக்கப்படுகின்றன. இந்த விமானங்கள் மூலம் பிரிட்டனுக்கு ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணிக்கின்றனர்.
பெரும்பாலும் அமீரகம் போன்ற அதிக வெப்பம் நிலவும் நாடுகளில் வசிக்கும் பொதுமக்கள் சுற்றுலாவுக்காக குளிர் பிரதேசமான ஐரோப்பாவை நோக்கி படையெடுத்து வருவது வழக்கம். தற்போது கோடை காலம் என்பதால் பிரிட்டனிலும் வெயில் வாட்டி வதைக்கிறது. இதனால் ஹீத்ரோ விமான நிலையத்தில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

 அதன்படி நாளொன்றுக்கு அதிக பட்சமாக 1 லட்சம் சுற்றுலா பயணிகளை மட்டுமே கையாள ஹீத்ரோ விமான நிலைய நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
நிர்வாக வசதிக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதை ஏற்று ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து ஒரு வார காலத்திற்கு விமான சேவை நிறுத்தப்படுவதாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.