ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசை கவிழ்க்க மாட்டோம்

ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசை கவிழ்க்க மாட்டோம்

அமித்ஷா பேச்சு

ராஜஸ்தானில் ஜெய்ப்பூரில் நடைபெற்ற பாஜக எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா பேசுகையில், ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசை ஒருபோதும் நாங்கள் கவிழ்க்க மாட்டோம். பாஜக நேரடியாக மக்களை சந்தித்து, மக்களின் பேராதரவுடன் 2023ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.