பிரிட்டனில் அமேசான் பணியாளர்கள் வேலை நிறுத்தம்

பிரிட்டனில் அமேசான் பணியாளர்கள் வேலை நிறுத்தம்

பிரிட்டனில் அமேசான் பணியாளர்கள் ஊதிய உயர்வு கோரி நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மணிக்கு தலா இரண்டு பவுண்டு வீதம் ஊதிய உயர்வு கோரி அமேசான் ஊழியர்கள் நேற்று இந்த வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுத்தனர். இதில் 700க்கும் அதிகமான ஊழியர்கள் பங்கேற்றனர். இதனால் அமேசான் நிறுவன செயல்பாடுகள் அடியோடு முடங்கின. டெலிவரி சேவை ஏதும் நேற்று நடைபெறவில்லை.

இதற்கிடையே ஊழியர்களின் கோரிக்கையை பரிசீலித்த அமேசான் நிறுவனம், மணிக்கு 35 பென்ஸ் ஊதிய உயர்வு அளிக்க முன் வந்தது. ஆனால் இரண்டு பவுண்டுக்கு குறைவாக ஊதிய உயர்வு அளித்தால், அதனை ஏற்க மாட்டோம் என அமேசான் ஊழியர்கள் திட்டமிட்டமாக அறிவித்து விட்டனர்.

மாறிவரும் பொருளாதார சூழலுக்கு ஏற்ப தங்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவே ஊதிய உயர்வு கோருவதாக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். இன்றைய நிலவரப்படி சர்வதேச அளவில் அதிக லாபம் ஈட்டும் நிறுவனங்களில் அமேசானும் ஒன்று என்பது குறிப்பிடப்பட்டது.