அமெரிக்காவில் 78 வயதில் பட்டம் பெற்ற மூதாட்டி!

அமெரிக்காவில் 78 வயதில் மூதாட்டி ஒருவர் பட்டம் பெற்று தனது வாழ்நாள் கனவை நிறைவேற்றியிருக்கிறார்.

அலபாமா பகுதியைச் சேர்ந்தவர் விவியன் கன்னிங்ஹாம். 78 வயதான இவருக்கு, டொனால்டு (59), தாரா (54) ஆகிய பிள்ளைகளும், பேரக் குழந்தைகளும், கொள்ளுப் பேரப் பிள்ளைகளும் இருக்கின்றனர். இளமைப் பருவத்திலேயே கணவரை இழந்த கன்னிங்ஹாம், அலபாமா மின்நிறுவனத்தில் ஊழியராக வேலைக்குச் சேர்ந்து தனது குழந்தைகளை படிக்க வைத்து நல்லநிலைக்கு கொண்டுவந்தார். கல்லூரி படிப்பை நிறைவு செய்யாத கன்னிங்ஹாமுக்கு அது ஒரு குறையாகவே இருந்தது. இதனால், தான் வேலைபார்த்த நிறுவனத்தின் உதவியுடன் பர்மிங்ஹாமில் உள்ள சாம்போர்டு பல்கலைக்கழகத்தில் லிபரல் ஸ்டடிஸ் பயில விண்ணப்பித்தார். இதனிடையே, 1992இல் பணி ஓய்வுபெற்ற அவர், அதன்பின்னர் படிப்படியாக படிப்பில் கவனம் செலுத்தி ஏறத்தாழ 30 ஆண்டுகள் இடைவெளியில் ஒருவழியாக தேர்ச்சி பெற்று பட்டம் பெற்றிருக்கிறார். இதை மிகப்பெரிய கௌரவமாக கருதும் கன்னிங்ஹாம், தனது அனுபவம் குறித்து குறிப்பிடுகையில், உங்களுக்கு ஒரு கனவு இருந்து, அதை நனவாக்க விடாமுயற்சியுடன் முயன்றால் அது நிறைவேறும். உங்களால் அந்தக் கனவை அடைய இயலாது என்று யாரையும் ஏளனமாக சொல்ல விடாதீர்கள் என்றார்.

Add your comment

Your email address will not be published.

eighteen + nine =