வன்முறையில் 7 போலீஸ் அதிகாரிகள் காயம்

 

வேல்ஸ் மாகாணத்தின் ஸ்வான்ஷி மேஹில் பகுதியில் இருதரப்பினர் இடையே வியாழக்கிழமை மோதல் வெடித்தது. இதில், வீடுகள், வாகனங்கள் சூறையாடப்பட்டன. தகவலறிந்த போலீஸôர், அங்கு சென்று நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர முயன்றனர். அப்போது காவல் துறையினர் மீது கலகக்காரர்கள் செங்கற்களை தூக்கி வீசினர். இதில், 7 போலீஸ் அதிகாரிகள் காயமடைந்தனர்.

இந்த நிகழ்வுக்கு கண்டனம் தெரிவித்த வேல்ஸ் முதன்மை அமைச்சர் மார்க் டிரேக்போர்ட், இந்த நிகழ்வுகள் யாவும் விரும்பத்தகாதவை. வேல்ஸ் மாகாணத்தில் வன்முறையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றார். இந்த சம்பவம் பிரிட்டனத்துக்கு தலைகுனிவை ஏர்படுத்தி இருப்பதாகவும், நிலைமையைக் கட்டுப்படுத்தி இயல்பு நிலை திரும்ப செய்த போலீஸ் அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவிப்பதாகவும் பிரிட்டன் உள்துறை செயலாளர் பிரீத்தி பட்டேல் தெரிவித்தார்.

Add your comment

Your email address will not be published.

twenty − seven =