போல்டனில் 6,200 பேருக்கு தடுப்பூசி

பிரிட்டனில் வேறு எங்கும் இல்லாத வகையில், போல்டனில் மட்டும் கடந்த மே 11ஆம் தேதி வரையிலான நிலவரப்படி, அதற்கு முந்தைய 7 நாள்களில் 733 பேருக்கு இந்தியவகை கரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனால், போல்டனில் தடுப்பூசி முகாம் முடுக்கிவிடப்பட்டது. இதன் காரணமாக வார இறுதி நாள்களில் மட்டும் இங்கு 6200க்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் மையங்களுக்கு முன்பாக பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசியை பெற்றுக் கொண்டனர். இந்தியவகை கரோனாவுக்கான ஹாட்ஸ்பாட்டாக போல்டன் மாறிய சூழலில், அங்கு அனைவருக்கும் துரிதமாக தடுப்பூசி செலுத்த பிரிட்டன் அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

Add your comment

Your email address will not be published.

1 × 1 =