இங்கிலாந்தில் இதுவரை 5 கோடி தடுப்பூசிகள் பயன்பாடு

 

இங்கிலாந்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி முதல் மே 21ஆம் தேதி வரை 5 கோடியே 2 லட்சத்து 46 ஆயிரத்து 402 கரோனா தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதில், 3 கோடியே 15 லட்சத்து 46 ஆயிரத்து 846 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 1 கோடியே 86 லட்சத்து 99 ஆயிரத்து 556 பேருக்கு இருதவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

தற்போது 32 முதல் 33 வயதுக்கு உள்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்காக அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. இதை பிரிட்டன் வரலாற்றின் மிகப்பெரிய தேசிய முயற்சிகளில் ஒன்று என்று குறிப்பிட்ட சுகாதாரத்துறை செயலாளர் மாத் ஹான்காக், வருகிற ஜூலை மாதத்துக்குள் வயதுவந்த அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

Add your comment

Your email address will not be published.

nineteen + 11 =