535 பவுண்ட் கடன் பாக்கி வைத்திருக்கும் பிரதமர் போரிஸ் ஜான்சன்

 

இங்கிலாந்து, வேல்ஸ் நாடுகளை பொறுத்தவரையில் தனியார் நிதி நிறுவனம் அல்லது வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய கடன் தொகையை முறையாக செலுத்தாமல், பாக்கி வைத்திருக்கும் தனிநபர்களின் பெயர் விவரம் கவுண்டி நீதிமன்றம் வாயிலாக வெளியிடப்படுவது வழக்கம்.

இப்படி வெளியானால், கடன் பாக்கி வைத்திருக்கும் நபர், சட்டப்பூர்வமாக அந்தத் தொகையை செலுத்த வேண்டும் என்பது பொருள். இதுதவிர சட்டப் பணியாளரும் அந்த நபரின் வீட்டுக்கு சென்று, கடன் பாக்கியை செலுத்துமாறு அறிவுறுத்துவார். வங்கிகளும், நிதி நிறுவனங்களும் சம்பந்தப்பட்ட நபருக்கு கூடுதலாக கடன் வழங்கலாமா, வேண்டாமா என்பதை இதன்மூலம் தீர்மானிக்க இயலும்.

இந்த நிலையில், பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு எதிராக கவுண்டி நீதிமன்றம் தீர்ப்பை பதிவு செய்திருப்பது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கெனவே தனது அதிகாரபூர்வ இல்லத்தை புதுப்பித்ததில் அவர் முறைகேடு செய்ததாக எழுந்த குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தற்போது அடுத்த சர்ச்சையில் அவர் சிக்கியிருக்கிறார். இதன்மூலம் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு அவர் 535 பவுண்ட் கடன் பாக்கி வைத்திருப்பது உறுதியாகியுள்ளது.

Add your comment

Your email address will not be published.

8 + 3 =