தீபாவளி பரிசாக சுமார் 50 லட்ச ரூபாய்
புதுச்சேரி திமுகவைச் சேர்ந்த 6 சட்டமன்ற உறுப்பினர்கள் தீபாவளி பரிசாக சுமார் 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள பரிசுகளை அரசிடம் இருந்து பெற்றுள்ளனர்.
இலவசம் பெறும் போது இனிப்பாக இருந்த தீபாவளி பண்டிகை. மக்களுக்கு வாழ்த்து சொல்வதற்கு மட்டும் திமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கசக்குமா என அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் கேள்வி.
புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக மாநில செயலாளர் அன்பழகன், காலாப்பட்டு பகுதியில் சொலாரா மருந்து தயாரிக்கும் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் படுகாயமடைந்த மற்றொரு நபர் உயிரிழந்துள்ளார் என்றும், தற்போது மரணமடைந்துள்ள யுவராஜ் என்பவர் சிறார் என்று கூறிய அவர், குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்த அந்த நிறுவனத்திற்கு அதிகாரம் அளித்தது யார் என்றும், இது சம்பந்தமாக பணியில் உள்ள தொழிலாளர்கள் நிலை குறித்து ஒரு நாளாவது தொழிலாளர் நலத்துறை ஆணையர் அங்கு ஆய்வு நடத்தியது உண்டா? என கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், மக்கள் நலனில் அக்கறை செலுத்த வேண்டிய இந்த ஆளும் பாஜக என்.ஆர்.காங்கிரஸ் தலைமையிலான அரசு விபத்து ஏற்படுத்திய காலாப்பட்டு மருந்து தொழிற்சாலை நிறுவனத்தில் நடைபெறும் தவறுகளை மூடிமறைத்து அவர்களை காப்பாற்றும் செயலில் ஈடுபட்டு வருவது வேதனை அளிக்க கூடிய ஒன்றாக உள்ளது என கூறினார்.
மேலும் திமுகவைச் சேர்ந்த 6 சட்டமன்ற உறுப்பினர்கள் தீபாவளி பரிசாக சுமார் 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள பரிசுகளை அரசிடம் இருந்து பெற்று சென்றதாகவும், இலவசம் பெறும் போது இனிப்பாக இருந்த தீபாவளி பண்டிகை.
அது சம்பந்தமாக வாழ்த்து சொல்வதற்கு மட்டும் திமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கசக்குமோ. எனவே வரும் பாராளுமன்ற தேர்தலில் திமுக சம்பந்தமான கூட்டணிக்கு மக்கள் சரியான தீர்ப்பை வழங்க வேண்டும். பல சமுதாய மக்களின் பண்டிகைகளுக்கு வாழ்த்து கூறும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தமிழர்களின் பண்டிகையான தீபாவளி பண்டிகைக்கு வாழ்த்து தெரிவிக்காமல் உள்ளது கண்டிக்கத்தக்கது என கூறினார்.