48 பேரை மட்டுமே கொண்ட தீவில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நிறைவு

பிரிட்டனில் வெறும் 48 பேரை மட்டுமே மக்கள்தொகையாக கொண்ட “ஃ”பேர் ஐலி எனும் தீவில், கரோனா தடுப்பூசி இரண்டுகட்டமாக அனைவருக்கும் செலுத்தப்பட்டுவிட்டது.
ஓர்க்னீக்கும், ஷெட்லாந்துக்கும் இடையே அமைந்துள்ள இந்தத் தீவு, வெளிநாட்டுப் பறவைகள் வலசை வரும் புகலிடமாக திகழ்கிறது. 3 மைல் தூர நீளமும், ஒன்றரை மைல் தூர அகலமும் கொண்ட இந்தத் தீவுக்கு கடந்த 2018ஆம் ஆண்டில்தான் மின்விநியோகமே வழங்கப்பட்டது.
முதலில் இங்குள்ள நபர்களுக்கு பைஸர் நிறுவனம் தயாரித்த கரோனா தடுப்பூசி தான் செலுத்துவதாக இருந்தது. ஆனால், அதன் குறைந்த அளவு வெப்பநிலையை பராமரிப்பதில் சிரமம் நிலவியதால், அதற்கு பதிலாக அஸ்ட்ரா ஜெனிகா தடுப்பூசி குளிரூட்டப்பட்ட பெட்டியில் வைத்து, இத்தீவின் போக்குவரத்துக்கு உயிர்நாடியாகத் திகழும் சிறிய ரக விமானத்தில் எடுத்துச் செல்லப்பட்டு இரண்டு தவணைகளாக போடப்பபட்டுள்ளது.

இதுகுறித்து தடுப்பூசியை செலுத்திக் கொண்ட ஜான் பெஸ்ட் என்பவர் கூறுகையில், கரோனா தடுப்பூசியை இரண்டு தவணைகளாக பெற்றுக் கொண்டதன் வாயிலாக பிரிட்டனின் பாதுகாக்கப்பட்ட நாட்டில் வசிப்பதாகவும், கரேனா தொற்றுப் பரவலின் பிணைப்பில் இருந்து விடுபட்டுவிட்டதாகவும் உணர்கிறோம் என்றார் அவர்.
சுகாதார மற்றும் சமூக நலத்துறை இடைக்கால இயக்குநர் பிரெய்ன் சிட்டிக் கூறும்போது, பிரிட்டனில் கரோனா தொற்று கண்டறியப்படாத பகுதிகளில் இந்தத் தீவும் ஒன்று. ஆகையால், இதே நிலையை நீடிக்க வைப்பது மிகவும் இன்றியமையாதது எனக் கருதி, நாங்கள் களத்தில் இறங்கி செயல்பட்டோம் என்றார்.

Add your comment

Your email address will not be published.

fourteen − 9 =