வேல்ஸ் மாகாணத்தில் கரோனா 3ஆம் அலை தொடங்கியது

முதன்மை அமைச்சர் எச்சரிக்கை

வேல்ஸ் மாகாணத்தில் கோவிட் மூன்றாம் அலை தொடங்கிவிட்டதாகவும், தேசம் கடுமையான மருத்துவ நெருக்கடியை எதிர்கொள்வதாகவும் அதன் முதன்மை அமைச்சர் மார்க் டிரேக்ஃபோர்ட் தெரிவித்துள்ளார். மேலும், கோவிட் பாதிப்பில் இங்கிலாந்து, ஸ்காட்லாந்தை காட்டிலும் வேல்ஸ் 4 வாரகாலம் பின்தங்கியிருந்தாலும், லாக்டவுன் மேலும் 4 வாரம் நீட்டிக்கப்படும் என்றும் அவர் கூறினார். இந்த இடைப்பட்ட காலத்தில் 5 லட்சம் கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்படும் என்று கூறிய அவர், அதில் பெரும்பாலும் இரண்டாம் தவணையே அதிகம் செலுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

Add your comment

Your email address will not be published.

one × two =