உயர்மட்ட குழுவை மாற்றியமைத்தார் லண்டன் மேயர்

 

3 பெண்களுக்கு வாய்ப்பு

 

லண்டன் நகர மேயராக இரண்டாம் முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சாதிக் கான், தனக்கு ஆலோசனை வழங்கும் உயர்மட்ட குழு இயக்குநர்களை மாற்றி அமைத்திருக்கிறார். அதன்படி 30 வயதையுடைய 3 பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.

அந்த வகையில், அலி பிக்டன் என்பவர் செயல்பாடுகளுக்கான மேயரிய இயக்குநராகவும், சாரா பிரவுண் தகவல் தொடர்பு மற்றும் பெலிசிட்டி ஆப்பிள்பி பொது விவகாரம் மற்றும் அரசியல் நிர்வாகத்துக்கான இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து மேயர் சாதிக் கான் கூறுகையில், “”எனது உயரிய அணிக்கான இந்த 3 பேரின் நியமனத்தையும் அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். அனைவருக்கும் சிறப்பான, பிரகாசமான வருங்காலத்தை அளிப்பதற்காக அவர்களுடன் இணைந்து பணிபுரியும் நாள்களை எதிர்நோக்குகிறேன்” என்றார்.

Add your comment

Your email address will not be published.

six − one =