இங்கிலாந்தில் மேலும் 3 பேருக்கு இந்திய வகை கரோனா

இந்தியாவில் உருமாறிய கரோனா தொற்று இங்கிலாந்தின் லெய்செஸ்டரில் 3 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கடந்த வாரம் விமானத்தில் வந்த அந்த 3 பேரும், தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் இதுவரை 100க்கும் மேற்பட்டோருக்கு இந்த வகை தொற்று கண்டறியப்பட்டிருப்பதாகவும், இதன் மரபணு மாற்றம் அதன் பரவல் தன்மையை அதிகரிக்கக் கூடும் என்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இங்கிலாந்தில், பிற மண்டலங்களுடன் ஒப்பிடுகையில், லெய்செஸ்டரில் 1,00,000 லட்சம் பேருக்கு 55 பேர் என்ற வீதத்தில், இந்த மண்டலம் 8ஆவது இடத்தில் இருக்கிறது. பிரிட்டனால் பயணத் தடை விதிக்கப்பட்டு, கடந்த வாரம் வெள்ளிக்கிழமை சிவப்பு பட்டியலில் வைக்கப்பட்ட இந்தியாவிலிருந்து வந்த 3 பேருக்கு இந்தத் தொற்று கண்டறியப்பட்டிருப்பதாகவும், அவர்களுடன் தொடர்புடையவர்களை அடையாளம் காணும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் லெய்செஸ்டர் நகர கவுன்சில் தெரிவித்துள்ளது.

மேலும், தொற்றால் பாதிக்கப்பட்ட மூவரும் பயணத்துடன் தொடர்புடையவர்கள் என்பதால், அப்பகுதியில் குழு சோதனை நடத்துவதற்கு தேவை ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து நகர பொது சுகாதார இயக்குநர் பேராசிரியர் பிரவ்னி கூறியதாவது;
இந்தியாவில் உருமாறிய கரோனா தொற்று பாதிப்பு 3 பேருக்கு கண்டறியப்பட்டது குறித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை எனக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களிடமும், அவர்களிடம் தொடர்பு உடைவர்களுடனும் இங்கிலாந்து பொது சுகாதாரத் துறை தொடர்பில் இருக்கிறது. நாங்களும் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் கண்டு, அவர்களை 10 நாள்கள் தனிமைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். இந்த வகை தொற்றால் தீவிர சுகவீனம் அல்லது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதற்கான ஆதாரங்கள் ஏதுமில்லை.
ஆனாலும், அனைவரும் தொடர்ந்து கரோனா கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும். கைகளை அடிக்கடி சானிடைசர் கொண்டு சுத்தம் செய்வது, பொது இடங்களில் முகக்கவசம் அணிவது, 3ஆம் நபர்களிடமிருந்து விலகி இருப்பது, கரோனா விதிமுறைகளை கடைப்பிடிப்பது ஆகியன கரோனா பரவலை விரட்டுவதற்கு சிறந்த வழிமுறைகள் ஆகும். தடுப்பூசிகள் கரோனாவுக்கு எதிராக முழு பாதுகாப்பை தரும் என்பதை அறுதியிட்டு கூற இயலாது. இதன் மீது தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன என்றார் அவர்.

Add your comment

Your email address will not be published.

13 − 7 =