3 வருடத்திற்கு பின்பு இரண்டாவது மனைவியை அறிமுகபடுதினார் பிரபுதேவா
நடிகர் பிரபுதேவா இரண்டாவது திருமணம் முடித்து சில ஆண்டுகள் ஆன நிலையில், மனைவியில் முதல் காணொளி இணையத்தில் வெளியாகியுள்ளது.தென்னிந்திய சினிமா உலகின் மிகப்பெரிய நடிகராகவும், தயாரிப்பாளர் , நடன இயக்குனருமான பிரபுதேவா, என பன்முகம் கொண்டு வலம் வருகின்றார்.இவர் 1995ம் ஆண்டு ராம்லதா என்பவரைத் திருமணம் செய்த நிலையில் இந்த தம்பதிகளுக்கு 3 மகன்கள் பிறந்தனர். இதில் மூத்த மகன் விஷால் தனது 12ம் வயதில் காலமானார்.பின்பு 15 ஆண்டுகளுக்கு பின்பு தனது மனைவியை விவாகரத்து செய்த பிரபுதேவா, நடிகை நயன்தாராவை காதலித்து திருமணம் வரை சென்றார். இவரது முதல் மனைவி பிரச்சினை செய்ததால் நயன்தாரா இவரை விட்டு பிரிந்தார்.
நயன்தாராவின் பிரிவிற்கு பின்பு தனியாக வாழ்ந்து வந்த பிரபுதேவாக மருத்துவர் ஒருவரை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பே திருமணம் செய்துள்ளார். ஆம் இவர் முதுகுவலி காரணமாக சில வருடங்கள் அவதிப்பட்ட நிலையில், பிசியோதெரபிஸ்ட் மருத்துவர் ஒருவர் இவருக்கு சிகிச்சை அளித்துள்ளார்.அவர் மீது காதல் ஏற்பட்ட நிலைியல் இரண்டு பேரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். ஆனால் மனைவியை வெளியே காட்டாமல் இருந்த பிரபுதேவா சில வாரங்களுக்கு முன்பு தனது 50வது பிறந்தநாளை கொண்டாடினார்.அப்பொழுது பிரபுதேவாவின் இரண்டாவது மனைவி வீடியோ கால் மூலம் பேசி அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். அவரது மனைவி பேசுகையில், உங்களை திருமணம் செய்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டது. உங்களுடைய ஒழுக்கம் மற்றும் கடின உழைப்பு என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது.நீங்கள் எப்போதும் என்னை மகிழ்ச்சியாக வைத்துள்ளதாகவும், உங்களை திருமணம் செய்தததை அதிர்ஷ்டமாக கருதுவதாகவும், கடவுளுக்கு நன்றி. உங்களை திருமணம் செய்ததை நான் அதிர்ஷ்டமாக கருதுகிறேன். இதற்காக நான் கடவுளுக்கு கடமைப்பட்டிருக்கிறேன்.
GIPHY App Key not set. Please check settings