in , , ,

29-11-2023 பக்தி செய் (ஆன்மீக செய்திகள்) BHAKTHI SEI AANMIGA SEITHIKAL BRITAIN TAMIL BHAKTHI


Watch – YouTube Click

29-11-2023 பக்தி செய் (ஆன்மீக செய்திகள்) BHAKTHI SEI (AANMIGA SEITHIKAL)

1.காளையார்கோவில் அருள்மிகு ஶ்ரீ சுகந்தவன பெருமாள் திருக்கோவிலில் மண்டல பூஜை விழாவை முன்னிட்டு தெய்வங்களுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் நகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ சுகந்தவன பெருமாள் திருக்கோவிலில் மண்டல பூஜை விழாவை முன்னிட்டு தெய்வங்களுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது முன்னதாக மூலவர் பெருமாள் தாயார்கள் கருடாழ்வார் ஶ்ரீஆண்டாள் ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆழ்வார்கள் மற்றும் உற்சவ தெய்வங்களான பெருமாள் தாயார்களுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது தொடர்ந்து தெய்வங்களுக்கு புதுப்பட்டு வஸ்திரங்கள் அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்து தீப ஆராதனை காண்பிக்கப்பட்டன.

2.கன்னியாகுமரி-அரசம்பதி திருஏடு வாசிப்பு திருவிழா ஊர்வலம்

கன்னியாகுமரி மாவட்டம் அரசம்பதியினிலே ஆதிசேஷன் மடி அமர்ந்து வந்து அகிலமெல்லாம் காத்தருளும் ஆயிரங்கோடி சூரிய பிரகாச சுத்த வைகுண்ட ஆதிபரன் நாதனுக்கு திருகொடியேற்றம் மற்றும் திருஏடு வாசிப்பு திருவிழா முன்னிட்டு முத்திரிப்பதம் ஊர்வலம் சிறப்பாக நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்டம் அற்புதமான அதிசயங்கள் நிகழும் ஆதிபரன் அரசம்பதி திருஏடு வாசிப்பு திருவிழாவை முன்னிட்டு உலகின் நெற்றிசூழியான சுவாமி தோப்பில் இருந்து முத்திரிப்பதம் எடுத்து மங்கையர்கள் சுருள் தாங்கி அரசம்பதி நோக்கி சிங்காரி மேளம் கும்மி, கோலாட்டம், மேளதாளம் முழங்க மாபெரும் ஊர்வலம் ஸ்ரீ குரு சிவச்சந்திர சுவாமிகள் தலைமையில் நடைபெற்றது.நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை அகில பாரத அன்பாலயம் இயக்க நிர்வாகிகள் மற்றும் அரசம்பதி விழா குழுவினர் செய்திருந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

3.கோட்டூர் அருள்மிகு ஶ்ரீ அகத்தீஸ்வரர் சுவாமி திருக்கோவிலில் உற்சவர் சுவாமி அம்மன் ரிஷப வாகனத்தில் திருவீதி உலா

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கோட்டூர் கிராமத்தில் அமைந்துள்ள புராண சிறப்புமிக்க அருள்மிகு ஸ்ரீ சௌந்தரநாயகி அம்பாள் சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் சுவாமி திருக்கோவிலில் உற்சவர் சுவாமி அம்மன் ரிஷப வாகனத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார் முன்னதாக உற்சவர் ஸ்ரீ அகத்தீஸ்வரர் சுவாமி சவுந்தரநாயகி அம்பாள் சர்வ அலங்காரத்தில் ரிஷப வாகனத்தில் எழுந்தருளினார்கள் தொடர்ந்து தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று மகா தீப ஆராதனை காண்பிக்கப்பட்டன பின்னர் மங்கள வாத்தியங்களுடன் தெய்வங்களை வாகனத்தில் எழுந்தருள செய்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வந்தனர் ரிஷப வாகனத்தில் பவனி வந்த சுவாமி அம்மனுக்கு ஏராளமான பக்தர்கள் அர்ச்சனைகள் செய்து வழிபட்டனர்.

4.திருப்பதி-ஸ்ரீகாளஹஸ்தி கார்த்திகை அம்பாள் சுவாமி பெருவிழா புறப்பாடு


Watch – YouTube Click

What do you think?

அமீரின் தரமான சம்பவம்….. விழுந்து அடித்து மன்னிப்பு கேட்ட ஞானவேல் ராஜா

பொன்மணி நெல் ரகம் அறிவியல் மையத்தில் புது முயற்சி