in , ,

(29.11.2023) இன்றைய முக்கிய செய்திகள் – பிரிட்டன் தமிழ் | Today news update – Britain tamil news


Watch – YouTube Click

இன்றைய முக்கிய செய்திகள்

சீனாவில் நிமோனியா தொற்று வேகமாகப் பரவிவருவதாக செய்தி வெளியான நிலையில், மத்திய அரசு மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியிருந்தது. இதையடுத்து, மத்திய அரசின் உத்தரவுக்குப் பிறகு தமிழ்நாடு, கர்நாடகா, ராஜஸ்தான், உத்தராகண்ட், குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்கள் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனர்

குழந்தைகள், வாலிபர்கள், வயதானவர்கள் என அனைத்து தரப்பு மக்களையும் வைரஸ் காய்ச்சல் தாக்கி வருகிறது.சாதாரண வகை வைரஸ் காய்ச்சல் என்றாலும் குணமாக 4 முதல் 5 நாட்கள் வரை ஆகிறது.

ஈரோடு புவனகிரி அருகே 250 ஏக்கரில் தேங்கி நிற்கும் மழை நீர் – விவசாயிகள் கவலை

“பயங்கரவாதத்தை சற்றும் பொறுத்துக் கொள்ளாத கொள்கையுடன் அணுகுகிறோம்” – ஐ.நா.வில் இந்தியப் பிரதிநிதி பேச்சு

மது பாட்டிலில் பல்லி- குடிமகன்கள் வாக்குவாதம்
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அடுத்த வீரகமோடு

கூடுதல் பஸ் வசதி கோரி மாணவ, மாணவிகள் மறியல்.புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் பழைய கந்தர்வக்கோட்டையில்

செம்பரம்பாக்கம் ஏரியில் வினாடிக்கு ஆயிரம் கன அடி நீர் திறப்பு…

புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு…

சென்னை தி.நகரில் உள்ள நகை பட்டறையில் உருக்கிய நிலையில் இருந்த 6.4 கிலோ தங்கம் திருட்டு போயுள்ளது.

1.40 லட்சம் இந்திய மாணவர்களுக்கு விசா: அமெரிக்க தூதரகம் சாதனை

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது

பெண்களை கடத்தி இந்தியாவில் விற்பனை… வங்காளதேச இளைஞரின் ஜோரான வேலை.சட்டவிரோத ஆட்கடத்தல் நெட்வொர்க்கானது, தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் பரவி, செயல்பட்டு வருவதும் தெரிய வந்தது

ரூ.47,000-ஐ எட்டும் தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ.720 உயர்ந்து ரூ.46,960க்கு விற்பனை..!!

மதுரை தோப்பூரில் வழிப்பறி கொள்ளையர்கள் தாக்கியதில் புலம்பெயர் தொழிலாளி உயிரிழப்பு

சபரிமலையில் ஐயப்பன் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்: கடந்த 14 நாட்களில் 8 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம்

கேரளாவில் அடுத்த 5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

தொடர்ந்து புகையிலை பொருட்கள் விற்பனை நெல்லையில் 2 கடைகள் மூடல்: உரிமம் அதிரடியாக ரத்து

சாத்தான்குளம் : பொத்தகாலன்விளையில் சடையனேரி கால்வாயை கிராம மக்களே ஊர் மக்களிடம் பணம் பிரித்து சீரமைத்தனர்.

பெரம்பலூர் அருகே லாரி மீது ஆம்னி பஸ் மோதி 2 பேர் பலி

கோத்தகிரியில் கை விலங்கிட்டு 15 சிறுமியை போலீசார் விசாரணைக்கு அழைத்து வந்ததாக சர்ச்சை எழுந்தது குறித்து தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் நேரில் விசாரணை நடத்தினார்.

அந்தமானில் சிக்கிய உடமைகள் விமான பயணிகள் போராட்டம்: அதிகாரிகள் சமரசம்

திருவான்மியூரில் செயல்பட்ட பிளாஸ்டிக் குடோனுக்கு சீல்: மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை

தமிழகத்தில் காலாவதியான 20 சுங்கச்சாவடிகளை சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி அகற்ற வேண்டும்: முதல்வருக்கு லாரி உரிமையாளர்கள் கோரிக்கை

பொதுப்பணித் துறை தொடர்புடைய இடங்களில் அமலாக்கதுறை 2-வது முறையாக சோதனை!

ஐஐடி மாணவர் தற்கொலை விவகாரம் – சிறப்பு குழு விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்!

சிறையில் பணியில் இருந்த காவலர் மது அருந்தும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் வைரல்.

புதுச்சேரியில் மதுபானக்கடை மீது இளைஞர் நாட்டு வெடிகுண்டு வீசும் சிசிடிவி
காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Watch – YouTube Click

What do you think?

திமுக அமைச்சர்களுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

விஜயகாந்த் உடல்நிலை கவலைக்கிடம்….. மருத்துவமனையின் அதிர்ச்சி ரிப்போர்ட்