கோவா அரசு மருத்துவமனையில் கரோனாவுக்கு ஒரே நாளில் 26 பேர் பலி

 

கோவா அரசு மருத்துவமனையில் கரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 26 பேர் பலியானது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 

கோவா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த 26 பேர், திங்கள்கிழமை அதிகாலை 2 மணி முதல் 6 மணி வரை அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதையறிந்த கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் உடனடியாக பாதுகாப்பு கவச உடையுடன் அந்த மருத்துவமனைக்கு விரைந்து கரோனா வார்டை பார்வையிட்டார்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், மருத்துவமனை நிர்வாகம் ஆக்சிஜன் சிலிண்டரை பெற்றதற்கும், அதை நோயாளிகளுக்கு செலுத்துவதற்கும் இடையே ஏற்பட்ட கால இடைவெளியில் இந்த உயிரிழப்புகள் நேர்ந்திருக்கலாம். கோவாவில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை என்றார்.

இதனிடையே, இந்த சம்பவத்துக்கான உண்மை காரணத்தை அறிய உயர்நீதிமன்றம் தலைமையில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென கோவா சுகாதாரத் துறை அமைச்சர் விஸ்வஜித் ரானே வலியுறுத்தினார்.

Add your comment

Your email address will not be published.

nineteen − thirteen =