250 குடும்பங்களுக்கு உதவிய விஜய் சேதுபதி
பெரிய நடிகர்களின் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து தனது கடின உழைப்பின் மூலம் முன்னேற்றம் அடைந்து பலருக்கு ஒரு உதாரணமாக திகழ்பவர் நடிகர் விஜய் சேதுபதி. தமிழை தாண்டி மலையாளம், தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் படங்கள் நடிக்கிறார். மக்கள் செல்வன் தனது ரசிகர்கள் மீது காட்டும் அன்பும் புதுவிதமாக இருந்தது, யாராக இருந்தாலும் கட்டியணைத்து முத்தம் கொடுத்து தனது பாசத்தை வெளிக்காட்டுவார். தற்போது இவர் செய்துள்ள ஒரு விஷயம் மக்கள் மனதில் பெரிய இடத்தை பிடித்துவிட்டார் என்றே கூறலாம். பிரபல இயக்குனரும், பெப்சி தலைவருமான ஆர்.கே.செல்வமணி விஜய் சேதுபதி பற்றி கூறுகையில், பெப்சி யூனியனில் பணிபுரியும் தொழிலாளர்கள் 250 பேருக்கு வீடு கட்டிக் கொடுக்க பண பற்றாக்குறை இருப்பதை கூறினேன். உடனடியாக விஜய் சேதுபதி 250 பேருக்கு தலா ஒருவருக்கு ரூ. 50,000 கொடுத்து உதவியுள்ளார். மேலும் 30 லட்சம் தேவைப்பட அவரிடம் இதுகுறித்து கூற உட தனது உதவியாளர் மூலம் பணத்தை கொடுத்தார் என கூறியுள்ளார். விஜய் சேதுபதி ரசிகர்களை கவனிக்கும் விதத்தை பார்த்தே ஆச்சரியப்படும் மக்கள் அவரது இந்த உதவும் மனதை கண்டு நெகிழ்ந்துள்ளனர்.
GIPHY App Key not set. Please check settings