25 ஆண்டுகள் பணி ஆற்றிய 32 ஊழியர்களுக்கு பணி நியமன ஆணை | Appointment order for 32 employees
காரைக்கால் பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் 25 ஆண்டுகள் பணி ஆற்றிய 32 ஊழியர்களுக்கு பணி நியமன ஆணையை முதலமைச்சர் ரங்கசாமி வேளாண்துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் ஆகியோர் வழங்கினார்.
காரைக்காலில் இயங்கி வரும் பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் கடந்த 1987 முதல் இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்த 32 விவசாய தினகூலி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுத்து அதன்படி 32 விவசாய தினக்கூலி ஊழியர்களுக்கு பணி நியமன ஆணையை சட்டப்பேரவை வளாகத்தில் சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் மற்றும் வேளாண்துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் முன்னிலையில் முதலமைச்சர் ரங்கசாமி பணி ஆணையை வழங்கினார். அப்போது பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் முதல்வர் த புஷ்பராஜ் மற்றும் அலுவலக ஊழியர்கள் உடன் இருந்தனர்.