2000 ரூ.திரும்ப பெறுவது பைத்தியகாரத்தனம் | Seeman Speech
2000 ரூ. திரும்ப பெறுவது பைத்தியக்கார த்தனம்.வேலையில்லா தையல்காரன் யானைக்கு டவுசர் தைத்த கதைதான் என்று நாம் தமிழர் கட்சியின் ஓருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்…
1348வது ஆண்டு முத்திரையார் நினைவு நாளை முன்னிட்டு புதுச்சேரி-கடலூர் சாலை 100 அடி சாலை சந்திப்பில் அவரது உருவப்பட மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று நடந்தது.இதில் பங்கேற்ற கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் படத்திற்கு மரியாதை செலுத்தி கட்சி கொடியை ஏற்றினார்கள்.பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர்,
விஷ சாராய விவகாரத்தில்
அமைச்சர்கள் செந்தில் பாலாஜி,,செஞ்சி மஸ்தான் பதவி விலகி இருக்கவேண்டும்.விஷ சாராயத்திற்கு அனைவரும் பதவி விலகி இருக்க வேண்டும்.கொடநாடா கொலைக்கு எடப்பாடி பதவி விலகி இருக்க வேண்டும்.ஆனால் யாருக்கு தார்மீக பொறுப்பு என்பது இல்லை.
எடப்பாடி ஆட்சியில் கள்ளச்சாராயம் இருந்தது.ஆனால் மக்கள் சாகவில்லை.இதற்கு அவர்களை தேர்வு செய்தது மக்கள் அவர்கள் முடிவு செய்வார்கள்.ஆளுநருக்கு கடிதம் கொடுத்தால் போதுமா…? கொடநாடா கொலைக்கு கடிதம் கொடுக்கலாமா..? என கேட்டார்.
தமிழக முதல்வர் வெளிநாடு பயணம் குறித்து கேட்டதற்கு,
வெளிநாடுகளுக்கு ஏற்கனவே சென்றதற்கு என்ன முதலீடு பெற்றீர்கள்..? தொழில் வளர்ச்சி என்பது பசப்பு வார்த்தை என சீமான் தெரிவித்தார்.
புதுச்சேரியில் CBSE பாடத்திட்டம் துவங்குவது குறித்த கேள்விக்கு
CBSE பாடத்தின் நமது பாட்டனார் பற்றி வரலாறு வருமா…?
தமிழ் இருக்கு என சொல்கிறார்கள்.எங்கு இருக்கு…?
12,000 மாணவர்கள் தமிழ் தேர்வு எழுதவரலை..
தமிழ்..தமிழ் என கூறுகிறீர்கள்.இரு தலைமுறை தாய்மொழியே இல்லாமல் வளர்ந்து விட்டது…
“இன்னா மச்சான் Feel பண்ற..
டீ சாப்பிடுவோம்” என்கிறார்கள்..இதில் தமிழ் எங்கு வாழ்கிறது..இது தான் திராவிட மாடலா..நீண்ட காலமாக சூழ்ச்சி செய்து தமிழனை ஏமாற்றி விட்டார்கள்.
தமிழ் வாழ்க என மாநகராட்சியில் எழுதினால் போதுமா…உள்ளே கோப்பில் வேண்டாமா..?கொஞ்ச நாளைக்கு இந்த கொடுமை போகும் என சீமான் தெரிவித்தார்.
தமிழை தேடி பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் செல்வது குத்து கேட்டதற்கு..
காலம் கடந்து விட்டது…ஒரு கடைத்தெருவில் தமிழில் பெயர் இல்லை..ஒரு வானூர்தீயில் ஓட்டுநர் தமிழில் அறிவிப்பு வெளியிட்டார்.அனைவரும் கைதட்டினார்கள்..தமிழ் உணர்வு அனைவருக்கும் இருக்கு..டாக்டர் அய்யா 80 வயதிலும் தமிழை தேடி செல்கிறார்..பாராட்டுகிறேன்…அடுத்து வருபவர்கள் தொடர வேண்டும் என சீமான் தெரிவித்தார்.
வெயில் தொடர்ந்து கடுமையாக நீடிப்பதால்
பள்ளிகளுக்கான கோடை விடுமுறையை நீடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்த சீமான்,
மரணமடைந்த
விவசாயிகள்,இலங்கை தமிழர்கள் கொலை பல கொடிய சம்பவங்களுக்கு தமிழக அரசு தொகை கொடுத்ததா.?,தூத்துக்குடியில் நேர்மையான கிராம நிர்வாக அதிகாரி கொலை செய்யப்பட்டதற்கும் 10 லட்சம்.விஷ சாராயத்திற்கும் 10 லட்சம்.என்ன நியாயம்.காய்ச்சுவதே அவர்கள் என்பதால் பணம் கொடுத்து மறைக்க பார்க்கிறார்கள்
இனி மனமுடைந்தால் விஷம் குடிக்க தேவையில்லை..கள்ளசாராயம் குடித்தால் 10 லட்சம் கிடைக்கும். என சீமான் கூறினார்.
2000 ரூ. திரும்ப பெறுவது பைத்தியக்காரத்தனம்..வேலையில்லா தையல்காரன் யானைக்கு டவுசர் தைத்த கதைதான் என்றார் சீமான்…
GIPHY App Key not set. Please check settings