in

2 ஆயிரம் பேர் கலந்து கொண்ட மாபெரும் பேரணி


Watch – YouTube Click

2 ஆயிரம் பேர் கலந்து கொண்ட மாபெரும் பேரணி

மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி முன்னாள் அமைச்சர் எஸ். ராமச்சந்திரன் தலைமையில் பேரணியாக சென்று பொதுமக்களுக்கு அன்னதானம்.

திருவண்ணாமலை:05.12.2023

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 7ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.

திருவண்ணாமலை தண்டராம்பட்டு சாலை காமராஜர் சிலையிலிருந்து சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பொதுமக்கள் காமாட்சி அம்மன் கோவில் வீதி, திருஉடல் வீதி, தேரடி வீதி என நகரின் பல்வேறு முக்கிய வீதிகள் வழியாக ஊரலமாக வந்து காந்தி சிலை அருகே அலங்கரித்து வைக்கப்பட்ட ஜெயலலிதா அவர்களின் திருவுருவப்படத்திற்கு முன்னாள் அமைச்சரும் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளருமான எஸ். ராமச்சந்திரன் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதனை தொடர்ந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

ஊர்வலத்தில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ராஜன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அரங்கநாதன் உள்ளிட்ட மாவட்ட அணி நிர்வாகிகள், ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்


Watch – YouTube Click

What do you think?

காவலர் உதவியுடன் பேருந்து நடத்துனரின் பணப்பையை பிடுங்கிய பயணி

புதுச்சேரியில் முதன்முறையாக ஐபிஎல்