2வது கணவருடன் இருக்கும் மகளுக்கு பிறந்தநாள் கொண்டாடிய வனிதா விஜயகுமார்
நடிகை வனிதா விஜயகுமார் தனது 2வது மகளின் 14வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரு மகள்களுடன் பர்த்டே கொண்டாடிய புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார். நடிகர் ஆகாஷை 2000ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்ட வனிதா விஜயகுமார் 2007ம் ஆண்டு ஆகாஷை விவாகரத்து செய்து பிரிந்தார். நடிகர் ஆகாஷ் உடன் ஒரு மகன் மற்றும் மகளை பெற்றுக் கொண்டார் வனிதா விஜயகுமார். 2007ம் ஆண்டு தொழிலதிபர் ஆனந்த் ஜெய் ராஜன் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார் வனிதா விஜயகுமார். ஆனந்த் ஜெய் ராஜனுக்கும் வனிதா விஜயகுமாருக்கு பிறந்த மகள் தான் ஜெனித்தா ராஜன். ஆனந்த் ஜெய் ராஜனையும் 2012ம் ஆண்டு விவகாரத்து செய்து பிரிந்த வனிதா விஜயகுமார் தனது இரு மகள்களையும் தன்னுடன் வைத்திருக்க விரும்பினார். ஆனால், தனது மகளை ஆனந்த் ஜெய் ராஜன் கோர்டில் வழக்கு தொடர்ந்து தன்னிடமே வைத்திருக்கும் வகையில் செய்து விட்டார். அந்த இரண்டாவது மகளுக்குத் தான் தற்போது 14வது பிறந்தநாளை கொண்டாடி உள்ளார் வனிதா விஜயகுமார். மூத்த மகள் ஜோவிகா அம்மா வனிதாவுட்ன வசித்து வருகிறார். 2வது கணவருக்கு பிறந்த மகள் தந்தையுடன் ஹைதராபாத்தில் வசித்து வந்தாலும் அடிக்கடி தனது மகளை சென்று சந்தித்து அவருடன் நேரத்தை செலவிட்டு வரும் வனிதா விஜயகுமார் தற்போது 2வது மகள் ஜெனிதாவின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி உள்ளார். இரு மகள்களுடன் இருக்கும் போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு எங்க வீட்டு குட்டி அரிசி மூட்டைக்கு 14 வயசாகிடுச்சு என போஸ்ட் போட்டு வாழ்த்துக் கூறியுள்ளார்.
GIPHY App Key not set. Please check settings