இந்திய முக்கிய செய்திகள்…

 • பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 19ஆம் தேதி தொடங்குகிறது.
 • ம்முவில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல் குறித்து பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக்குழு நேற்று நடைபெற்றது. இதில், ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல் ஆகயோர் பங்குபெற்றனர்.
 • நீட் தேர்வினால் ஏற்படும் பாதிப்புகளை கண்டறியும் குழு அமைப்பதற்கு முன்பாக சுப்ரீம் கோர்ட்டிடம் ஒப்புதல் பெறப்பட்டதா என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
 • ர்வதேச நாடுகள் ஒருங்கிணைந்தால் மட்டுமே கோவிட் பெருந்தொற்றை எதிர்கொள்ள முடியும் என இத்தாலியில் நடைபெற்றுவரும் ஜி20 மாநாட்டில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் பேசினார். இதனிடையே, பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சர் டொமினிக் ராபையும் அவர் சந்தித்து பேசினார்.
 • ரே தேசம் ஒரே குடும்ப அட்டை திட்டத்தை ஜூலை 31ஆம் தேதிக்குள் அமல்படுத்த வேண்டுமென அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
 • இந்திய- சீன எல்லையில் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் முப்படைத் தளபதி விபின் ராவத் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
 • த்தர பிரதேச மாநிலம் லக்னோவில் அம்பேத்கர் நினைவிடத்துக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று அடிக்கல் நாட்டினார்.
 • மெரிக்காவின் மாடர்னா நிறுவனம் தயாரித்த தடுப்பூசியை இறக்குமதி செய்ய இந்தியாவின் சிப்லா நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதியளித்தது.
 • கோவிஷீல்ட் தடுப்பூசியை 3ஆம் தவணையாக செலுத்திக் கொண்டால், அதிகபட்ச நோய் எதிர்ப்பு சக்தியை பெறலாம் என ஆய்வில் தெரியவந்தது.
 • ம்மு காஷ்மீரில் டிரோன் மூலம் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதை ஐ.நா.வில் தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சக சிறப்புச் செயலர் வி.எஸ்.கே. கௌமுதி, சர்வதேச நாடுகள் இதில் கவனம் செலுத்த வேண்டுமென கேட்டுக் கொண்டார்.
 • ந்தியாவில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 49 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டுவிட்டதாக மத்திய அரசு தெரிவித்தது.

Add your comment

Your email address will not be published.

two + twelve =