நெருங்குகிறது யாஸ் புயல்: 11 லட்சம் பேர் வெளியேற்றம்

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள யாஸ் புயல், தீவிர புயலாக மாறி ஒடிசா மாநிலம், பாட்ரக் மாவட்டம் தம்ரா துறைமுகம் அருகே புதன்கிழமை அதிகாலை கரையைக் கடப்பதால், ஒடிசாவுக்கும், அண்டை மாநிலமான மேற்கு வங்கத்துக்கும் இந்திய வானிலை ஆய்வு மையம் “ரெட் அலர்ட்’ விடுத்தது.

இதையொட்டி, ஒடிசா மாநிலத்தில் கடலோர மாவட்டங்களில் வசிக்கும் 2 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதேபோல், மேற்குவங்கத்தில் 9 லட்சம் பேர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதுதவிர ஆந்திர மாநிலத்திலும் விசாகப்பட்டினம், விழியநகரம், ஸ்ரீககுலம்டூ மாவட்ட ஆட்சியர்கள் உச்சபட்ச எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென அம்மாநில முதல்வர் ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டி அறிவுறுத்தினார்.

Add your comment

Your email address will not be published.

3 × 2 =