ஆந்திராவில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 11 கரோனா நோயாளிகள் பலி

 

ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள வெங்கடேஸ்வரா ராமநாராயண பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த கரோனா நோயாளிகள் 11 பேர் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக திங்கள்கிழமை உயிரிழந்தனர்.

இந்த மருத்துவமனையில் திருப்பதி, சித்தூர், நெல்லூர் கடப்பா உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில், ஆக்சிஜன் சிலிண்டர்கள் வருவதற்கு சில நிமிடங்கள் தாமதமானதால், 11 பேர் உயிரிழக்க நேர்ந்ததாக மாவட்ட ஆட்சியர் எம். ஹரி நாராயணா தெரிவித்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த நோயாளிகளின் உறவினர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் நுழைந்து அங்கிருந்த மருத்துவ உபகரணங்களை சேதப்படுத்தினர். இதைப் பார்த்த மருத்துவர்களும், செவிலியர்களும் அங்கிருந்து பதற்றத்துடன் வெளியேறினர். தகவலறிந்த காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து நிலைமையக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். அதன்பின்னரே மருத்துவர்களும், செவிலியர்களும் வார்டுக்கு திரும்பினர்.

முன்னதாக, ஆந்திராவில் நிலவும் கரோனா சூழல் குறித்து அதிகாரிகளுடன் அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆலோசனை மேற்கொண்டார்.

Add your comment

Your email address will not be published.

4 × five =