100 நாள் வேலை திட்ட தொடக்க விழாவில் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய அமைச்சர் தேனீ ஜெயக்குமார்..
புதுச்சேரியில் 100 நாள் வேலை திட்ட தொடக்க விழாவில் வேளாண் துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமாருக்கு கிராம மக்கள் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினர்.
புதுச்சேரி வில்லியனூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் மங்கலம் தொகுதிக்கு உட்பட்ட பங்கூர் கிராமத்தில் உள்ள ஏரியை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.28.85 ஆயிரம் செலவில் வேலை திட்டத்தை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் வேளாண்துறை அமைச்சருமான தேனீ ஜெயக்குமார் பூஜை செய்து துவக்கி வைத்தார் இதில் கிராம மக்கள் அமைச்சரின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடி வாழ்த்து தெரிவித்தனர். நிகழ்ச்சியில் துறை அதிகாரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
GIPHY App Key not set. Please check settings