10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியமைக்கிறது திமுக

 

முதல்வராகிறார் மு.க. ஸ்டாலின்

 

தமிழகத்தில் 10 ஆண்டுகள் கழித்து திமுக மீண்டும் ஆட்சியைப் பிடித்திருக்கிறது. அக்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுகிறார். இதையொட்டி, அவருக்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

 

தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற்றது. இதில் 72.78% வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று வருகிறது. ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த திமுக, மாலை 5 மணிவரையிலான நிலவரப்படி 122 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. திமுக கூட்டணி கட்சிகள் 23 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன.

இதேபோல அதிமுக 79 தொகுதிகள் உள்பட அதன் கூட்டணி கட்சிகளையும் சேர்த்து 88 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. திமுகவின் வெற்றி ஏறத்தாழ உறுதியாகிவிட்ட நிலையில், அக்கட்சி 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் அரியணையில் அமர இருக்கிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்க இருக்கிறார்.

உதயநிதி ஸ்டாலின் வெற்றி:

இதேபோல், அவரது மகனும், திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலினும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் 66,302 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து களமிறங்கிய பாமக வேட்பாளர் கஸ்ஸôலி 17,062 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார்.

சென்னையில் உள்ள 16 தொகுதிகளில், முதல் தொகுதியாக சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி வெற்றி நிலவரம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மீதமுள்ள 15 தொகுதிகளில் துறைமுகம் தவிர மற்ற தொகுதிகளிலும் திமுக முன்னிலை வகிக்கிறது.

Add your comment

Your email address will not be published.

17 − 16 =