in

கடலூரில் 1 மாத கால நடைபெறும் கோமாரி தடுப்பூசி முகாம்

கடலூரில் 1 மாத கால நடைபெறும் கோமாரி தடுப்பூசி முகாம்

 

தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் படி கோமாரி தடுப்பூசி முகாம் கடலூர் மாவட்டத்தில் 52 இடங்களில் நடைபெறுகிறது.

இதன் மூலம் 3 இலட்சத்து 80000 கால்நடைகள் பயன்படுகின்றன 1 மாத கால நடைபெறும்.  இந்த முகாமில் முதல் நாள் இன்று மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் அவர்களால் கிழக்கு இராமாபுரம் பகுதியில் கால்நடை கோமாரி மருத்துவ முகாம் துவங்கியது.

கால்நடை பராமரிப்பு கடலூர் மாவட்டம் சார்பில் கடலூர் கிழக்கு ராமாபுரத்தில்
கோமாரி தடுப்பூசி முகாம் துவங்கியது. கடலூர் மாவட்டம் முழுவதும் 3 லட்சத்து 80 ஆயிரம் கால்நடைகள் பயன்பெறும் வகையில் 52 இடங்களில் ஒரு மாத கால அளவிற்கு இந்த மாவட்டம் முழுவதும் நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சியின் நோக்கம் வருகின்ற மழை மற்றும் குளிர்காலத்தை முன்னிட்டு கால்நடைகளுக்கு நோய் தடுப்பு நடவடிக்கையையொட்டி இந்த கோமாரி நோய் தடுப்பு ஊசி முகாம் நடத்தபடுகிறது. கடலூரில் இன்று மாவட்ட ஆட்சியர் கிழக்கு ராமாபுரத்தில் கோமாரி தடுப்பு ஊசி முகாமை துவக்கி வைத்து பின்னர் கால்நடை விவசாயிகளுக்கு தடுப்பூசி போடுவதற்கான அடையாள அட்டைகளையும் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் கால்நடை மண்டல இணை இயக்குனர் கால்நடை பராமரிப்பு திரு மோகன் அவர்களும் உதவி இயக்குனர் கால்நடை பராமரிப்பு வெங்கட்ராமன் அவர்களும் கால்நடை உதவி மருத்துவர் ஸ்டாலின் வேதமாணிக்கம் அவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் கிழக்கு ராமாபுரம் பகுதி சார்ந்த கால்நடை விவசாயிகள் சுமார் 300 க்கு மேற்பட்டோர் தங்கள் கால்நடைகளுக்கு இந்த முகாம் மூலம் கோமாரி தடுப்புசி போட்டு பயன்பெற்றனர்.

What do you think?

ஸ்ரீவில்லிபுத்தூரில் வீட்டின் பூட்டை உடைத்து 22 பவுன் நகை திருட்டு

சாலை ஓரத்தில் அமர்ந்திருந்த பெண்கள் மீது கார் மோதி விபத்து