1.2 மில்லியன் டாலருக்கு ஏலம்போன ஐன்ஸ்டீன் கையெழுத்து

இயற்பியல் விஞ்ஞானி ஆல்பிரட் ஐன்ஸ்டீன் ஜெர்மனி மொழியில் எழுதிய அவருடைய இயற்பியல் சமன்பாடுகள் அடங்கிய உ=ம்ஸ்ரீனி என்ற கையெழுத்து பிரதி, அமெரிக்காவில் 1.2 மில்லியன் டாலருக்கு (8,50,000 பவுண்ட்) ஏலம்போனது.

ஹோலோகிராபிக் மற்றும் இயற்பியல் பார்வையில் இது மிகவும் முக்கியமான கடிதம் என்று கூறிய ஏல நிறுவனம், இது தாங்கள் எதிர்பார்த்த தொகையை விட 3 மடங்கு அதிகம் என்றும் தெரிவித்தது. இந்த சமன்பாடு ஏற்கெனவே கடந்த 1905ஆம் ஆண்டில் ஆல்பிரட் ஐன்ஸ்டீனால் அறிவியல் இதழில் வெளியிடப்பட்டிருந்தது.

ஆற்றல், நிறையின் பரிமாற்றத்தை விவரிக்கும் இந்த சமன்பாடு, ஒளியின் வேகத்தில் நிறையை ஆற்றல் சமன்செய்கிறது என்ற நவீன இயற்பியலின் அடிப்படையை பறைசாற்றுகிறது.

கடந்த 1946ஆம் ஆண்டு அக்டோபர் 26ஆம் தேதி எழுதப்பட்ட இந்தக் கடிதம், ஐஸ்டீனின் சில தேற்றங்களைக் கேள்வி எழுப்பிய போலந்து} அமெரிக்க இயற்பியல் விஞ்ஞானி லுட்விக் சில்வர்ஸ்டினுக்கு மறுமொழியாக எழுதப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Add your comment

Your email address will not be published.

two × one =