வேல்ஸ் மாகாணத்தை தக்கவைக்கும் தொழிலாளர் கட்சி

 

வேல்ஸ் செனட் சபை தேர்தலில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 30 தொகுதிகளை கைப்பற்றி தொழிலாளர் கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்கிறது.

52 தொகுதிகளில் இதுவரை தேர்தல் முடிவுகள் வெளியாகியிருக்கின்றன. இதில், தொழிலாளர் கட்சிக்கு அடுத்தபடியாக கன்சர்வேடிவ் கட்சி 12 இடங்களிலும், பிளைய்டு சிம்ரு கட்சி 9 இடங்களிலும், லிபரல் டெமோக்ரேட்ஸ் ஓர் இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.
அதேவேளையில், வேல்ஸ் மாகாணத்தில் தொழிலாளர் கட்சியின் கோட்டையாக கருதப்படும் கில்விட் தொகுதியையும், லிபரல் டெமோக்ரேட்ஸ் கட்சியின் அரணாக கருதப்படும் ரட்னோர்ஷிர் தொகுதியையும் கன்சர்வேடிவ் கட்சி கைப்பற்றி, அங்கு வெற்றிக் கொடி நாட்டியிருக்கிறது. எஞ்சிய 8 தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

Add your comment

Your email address will not be published.

3 × three =