வெளியானது மாஸ்டர் படம்! தியேட்டர்கள் பட்டியல் இங்கே பார்க்கவும்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், கெளரி கிஷன், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாஸ்டர்’. இந்த படம் இன்று அனைத்து மொழிகளிலும் வெளியாகியுள்ளது. 

சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ள லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) இயக்கய இந்தப் படத்தின் ஒட்டுமொத்த வெளியீட்டு உரிமையையும் லலித் குமார் கைப்பற்றியுள்ளார். தற்போது படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் மும்முரமாக பணிபுரிந்து வருகிறது படக்குழு. தினமும் ஒவ்வொரு கதாபாத்திரத்தை முன்வைத்து ப்ரோமோ வெளியிட்டு வந்தனர். 

இந்நிலையில், பொங்கல் (Pongal) பண்டிகையை முன்னிட்டு, மாஸ்டர் (Master) திரைப்படம் இன்று வெளியானது. சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், அதிகாலை 4 மணிக்கு படம் திரையிடப்பட்டது. சென்னையில் உள்ள திரையரங்குகளில் இரவு முதலே ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். 

இதற்கிடையில் மாஸ்டர் படம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. கடந்த ஒன்பது மாதங்களாக கொரோனா தொற்று காரணமாக பெரிய திரைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை. மாஸ்டர் படம் தான் சுமார் பத்து மாத இடைவெளிக்குப் பிறகு வெளியாகும் முதல் பெரிய திரைப்படமாக அமைந்துள்ளது. இப்படத்தை உலகம் முழுவதும் பல தியேட்டர்களில் வெளியாகியுள்ளது. 

வெளிநாடுகளில் அமெரிக்கா தான் ஒரு பெரிய எதிர்பார்ப்பை எப்போதும் ஏற்படுத்தும். அங்கு இதுவரையில் சுமார் 100 தியேட்டர்களின் விஜய் இன் மாஸ்டர் படம் வெளியாகியுள்ளது. தியேட்டர்களின் பட்டியல் கீழே பார்க்கவும்.