in

விவேக்கின் … 62ஆவது பிறந்தநாள் … சின்னக்கலைவாணரை பற்றி அறியாதவைகள்

விவேக்கின் … 62ஆவது பிறந்தநாள் … சின்னக்கலைவாணரை பற்றி அறியாதவைகள்

இவரின் இறப்பு யாருமே எதிர் பார்க்காத ஒன்று. சின்னக்கலைவாணர் என்ற பட்டத்துக்கு கன கச்சிதமா பொருந்தியவர், நகைச்சுவை மன்னன், சமுக சீர்திருத்தவாதி நடிகர் விவேக்கின் 62ஆவது பிறந்தநாள் நேற்று . தமிழ் சினிமாவில் அவர் என்ட்ரி கொடுத்த நாளில் இருந்து மறையும் வரை எராளமான ரசிகர்களை தன் வசம் ஈர்தவர். விவேக் அவர்களின் வாழ்க்கை பக்கங்களை கனத்த இதயத்துடன் சற்று புரட்டி பாப்போம்.

நகைச்சுவை நடிகர் விவேக் அவர்கள் 19 நவம்பர்1961 இல் தமிழ்நாட்டில் சங்கரன் கோவில் அருகே உள்ள பெருங்கோட்டூர் கிராமத்தில் பிறந்தார். சென்னை செயலகத்தில் விவேக் பணிபுரியும் போது ஓய்வு நேரத்தில் ஹ்யூமர் கிளப்பில் ஸ்டாண்ட்-அப் காமெடிசெய்வார்கள். அதன் பிறகு சென்னையை விட்டு வெளியேறி, வணிகவியல் இளங்கலைப் பட்டத்தை மதுரையில் முடித்தார். அப்போது ஹ்யூமர் கிளப்பின் நிறுவனர் பி.ஆர்.கோவிந்தராஜன் இயக்குநர் கே. பாலச்சந்தரிடம் விவேக்கை அறிமுகப்படுத்தினார். கே. பாலச்சந்தரின் படங்களுக்கு திரைக்கதை-எழுத்தாளராக முதன் முதலில் அறிமுகமானார். நான்கு ஆண்டுகள் கழித்து ஒரு நாள் பாலச்சந்தர் அவர்கள் ஒரு suitation கொடுத்து பதினாறு actors …. களுக்கான ஸ்கிரிப்டை ரெடி பண்ண சொன்னார்.

over நைட் …ல விவேக் அவர்கள் ஸ்கிரிப் ரெடி பண்ணி பாலச்சந்தர் அவர்களை freeze பண்ணிவிட்டார். அவர் பின்னர் புரிந்து கொண்டார், மேலும் தனது நடிப்பின் மூலம், பாலச்சந்தர் விவேக்குடன் நெருக்கமாகிவிட்டார். 1987ஆம் ஆண்டு கே.பாலசந்தர் இயக்கிய மனதில் உறுதி வேண்டும் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் விவேக், தனது சிறப்பான நடிப்பின் மூலம் முதல் படத்திலேயே k.b.யையும் ரசிகர்களை கவந்துவிட்டார், ஆனாலும் அவருக்கு வாய்ப்புகள் மறுக்கபட்டது, இரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் கே.பாலசந்தர் இயக்கிய புது புது அர்த்தங்கள் படத்தில் நடித்து தனது நடிப்பு திறமையை நிருபித்ததன் மூலம் வாய்ப்புகள் தொடர்ந்தது.

விவேக் இல்லாமல் படமே இல்லை என்ற நிலையில் இருந்தது தமிழ் சினிமாவுக்கு. இடையில் நம்ப வைகை புயல் பக்கம் காற்று அடிக்க ஆரம்பித்தது, ஆனாலும் தனக்கே உண்டான பாணியில் இருந்து பின்வாங்காமல் ரசிகர்களை சிரிக்க வைப்பது மட்டும் தனது வேலையில்லை சிந்திக்கவும் வைக்க வென்றும் என்று சமூக கருத்துக்களையும், முற்போக்கு சிந்தனையும் மக்கள் மனதில் தூண்டிவிட்டார். அதனாலேயே அவரது காமெடி track அதிகம் ரசிக்க பட்டது. Vivek… இன் தனி அம்சமே அவர் படத்தில் யார் ஹீரோ யார் காமெடியன் என்ற டவுட் வரும், காமெடிக்குள் இருக்கும் ஹீரோ அவர். அவரது ஸ்டைளின் பிளஸ் பாயிண்ட்டே அவர் அணியும் கருப்பு கண்ணடித்தான்,ஆனால் உண்மையில் அது ஸ்டைல்ளுக்காக போட்ட கண்ணாடி கிடையாதாம், பகலில் சூரிய வெளிச்சத்தை பார்க்க முடியாதாம், கண் கூசும்மாம், இரவில் எவ்வளவு வெளிச்சம் இருந்தாலும், நன்றாக பார்க்க முடியும்மா, அதனால் கறுப்பு கிளாஸ்சில் பவர் ஏற்றிகொண்டாராம்,பார்வைக்கு பார்வை ஸ்டைளுக்கு ஸ்டைல் என ஹீரோவுகே tough கொடுத்தார்.

சில வருடங்களுக்கு முன்புதான் யூட்யூப் சேனளுக்கு பேட்டி கொடுக்கும் போது இந்த secret.. டை விவேக் உடைத்தார்.
தன் சினிமா வாழ்கையில் அனைத்து முன்னணி நடிகருடன் நடித்த காமெடி நடிகர் , ஆனால் அவரது ஒரேஆசை உலக நாயகனுடன் நடிக்க வேண்டும் என்று பல மேடைகளில் கூறினார். இந்தியன் 2 படத்தின் அவர் எண்ணம் நிறைவேறியது, அவரது நடிப்பை பார்க்க அவர் தான் இல்லை… இவர் மறைந்த பின்னும் அவரை கௌரவிக்கும் விதமாக விவேக் அவர்கள் நடித்த காட்சிகளை delete பண்ண வேண்டாம் என்று கமல் strict ஆர்டர் போட்டுவிட்டாராம்.

அவர் 16, ஏப்ரல் 2021 அன்று மூச்சுத் திணறல் மற்றும் chest pain காரணமாக வீட்டில் மயங்கி விழுந்த அவரை சென்னையில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், ஆனால் மறுநாள் 17 ஏப்ரல் 2021 அன்று இறந்த அவரை கனத்த இதயத்துடன் ரசிகர்கள் வழி அனுபின்னர். இறபதற்கு முன்பு கூட covid vacination பற்றி தனது கருத்துகளை ஆழமாக பதித்து விட்டு சென்றிருக்கிறார்

What do you think?

TRISHA அவமதிப்பு …மன்னிப்பு கேட்க மறுக்கும் மன்சூர்…தமிழக டிஜிபி-க்கு ஆர்டர்

புதுச்சேரி உப்பனாறு வாய்காலில் முதலை