in

விருதுநகர் மாவட்டத்தில் டிசம்பர் 6 ஆம் தேதியை முன்னிட்டு மக்கள் அதிகம் கூடும் இடங்களில் காவல் துறையினர் பலத்த சோதனை


Watch – YouTube Click

விருதுநகர் மாவட்டத்தில் டிசம்பர் 6 ஆம் தேதியை முன்னிட்டு மக்கள் அதிகம் கூடும் இடங்களில் காவல் துறையினர் பலத்த சோதனை

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்கோவில் சிறப்பு பெற்ற முக்கிய ஸ்தலம்மாகும். இக்கோவிலில் தான் தமிழ்நாடு அரசு முத்திரை சின்னமாக விளங்கும் இராஜகோபுரம் இடம் அமைந்துள்ளது. டிசம்பர் 6 ஆம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினம் என்பதால் தமிழக முழுவதிலும் உள்ள வழிபாட்டு தலங்கள் ,மக்கள் அதிகம் கூடும் இடங்களான ரயில் நிலையம்,பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவிலிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஐயப்பன் கோவிலுக்கு கேரளா செல்லும் பக்தர்கள் தமிழகம் மட்டும் மின்றி பிற மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்காணக்கான பக்தர்கள்கள்,பொதுமக்கள் ஆண்டாள் ரெங்கமன்னாரை தரிசித்து செல்வார்கள். தமிழக அரசின் இலட்சிணையாக விளங்கும் ராஜகோபுரம் அமைந்துள்ள ஸ்ரீ ஆண்டாள் கோவில் மற்றும் தங்க விமானம் ராஜகோபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயுதமிருந்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் கோவிலில் நடைபெறும் செயல்களை சிசிடிவி கேமரா மூலம் காவல்துறையினரால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. பக்தர்கள் தீவிர சோதனைக்கு பின்னரே கோவிலுக்குள் தரிசனம் செய்ய அனுமதிக்கபடுகின்றனர்.மேலும் மாவட்டம் முழுவதும் உள்ள ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


Watch – YouTube Click

What do you think?

ஆந்திராவை துவம்சம் செய்த புயல்

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே இருசக்கர வாகனத்தை திருடிய இளைஞரை சாத்தூர் நகர் போலீசார் மடக்கி பிடித்தனர்