விஜய் ஸ்டைலில் விருந்து வைத்து அமர்க்களபடுத்திய சிம்பு
நடிகர் சிம்பு இன்று தன்னுடைய வீட்டில், ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து உரையாடியது மட்டும் இன்றி, அவர்களுக்கு தடபுடலாக பிரியாணி விருந்து வைத்து அசத்தியுள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
அப்பா 8 அடி பாய்ந்தால்… பிள்ளை 18 அடி பாயும் என்கிற பழமொழிக்கு ஏற்ப, தனது தந்தையைப் போல் பல திறமைகளை கொண்டவாராக திரையுலகில் அசத்தி வருகிறார் சிம்பு.கடைசியாக சிம்பு நடிப்பில், இம்மாதம் வெளியான பத்து தல திரைப்படத்தில், இத்தனை வருடங்களில்… இதுவரை பார்த்திடாத சிம்புவை பார்க்க வைத்தது. மேலும் தனித்துவமான கெத்தான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இந்நிலையில், நடிகர் சிம்பு இன்று தனது வீட்டில், ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து உரையாடினார். பின்னர் தளபதி விஜய் ஸ்டைலில் ரசிகர்க மன்ற நிர்வாகிகளுக்கு தடபுடலாக பிரியாணி விருந்து வைத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் ஏராளமான ரசிகர்களும் கலந்து கொண்டுள்ளனர். சிம்பு ரசிகர் மன்றமாவட்ட தலைவர்கள் மற்றும் ரசிகர்களுடன் கலந்துரையாடி ரசிகர்களுக்கு தன்னுடைய கைகளாலேயே பிரியாணி விருந்து வைத்த புகைப்படங்களும் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.பத்து தல ஆடியோ வெளியீட்டு விழாவில்… இனி ஒரு போதும் ரசிகர்களை தலை குனிய விடமாட்டேன். என மிகவும் எமோஷ்னலாக பேசிய சிம்பு… அடுத்தடுத்து யாரும் எதிர்பாராத வகையில் இப்படி பல விஷயங்களை செய்து ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
GIPHY App Key not set. Please check settings