விஜய் ராகவேந்திரா மனைவி மரணம்
கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் ராகவேந்திரா, தனது குடும்பத்துடன் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றார். அங்கு அவரது மனைவியும், நடிகையுமான ஸ்பந்தனாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
இதையடுத்து பாங்காக்கில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஸ்பந்தனா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விஜய் ராகவேந்திரா மனைவியின் மரணத்தை அவரது சகோதரர் ஸ்ரீ முரளி உறுதி செய்துள்ளார்.