in

விஜய் யேசுதாஸ், ஐஸ்வர்யா வீட்டில் நடந்த திருட்டுக்கு இவர்தான் காரணமா??????

விஜய் யேசுதாஸ், ஐஸ்வர்யா வீட்டில் நடந்த திருட்டுக்கு இவர்தான் காரணமா?
ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் நகை திருட்டு சம்பவம், பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில், அண்மையில் பிரபல பாடகரும், நடிகருமான… கே ஜே ஜேசுதாஸின் மகன், விஜய் யேசுதாஸ் வீட்டில் இருந்து சுமார் 60 லட்சம் மதிப்புள்ள, தங்கம் மற்றும் வைர நகைகள் காணாமல் போனதாக விஜய் யேசுதாஸின் மனைவி தர்ஷனா திருட்டு நடந்து, ஒரு மாதம் ஆன பின்னரே இந்த புகாரை அவர் கொடுத்தார். இந்த நகை சம்பவத்தில் ஈடுபட்டது யார் என்பது குறித்து இதுவரை எந்த ஒரு துப்பும் துலங்க வில்லை., தற்போது விஜய் யேசுதாஸ் வெளிநாடு சென்றுள்ளதால், அவரின் மனைவியிடம் விசாரித்த போது, அவர் பதட்டத்தில் மாறிமாறி பேசிவருவதாக கூறப்படுகிறது. எனவே விஜய் யேசுதான் வெளிநாட்டில் இருந்து வந்ததும், இருவரையும் அமரவைத்து விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். மேலும் தர்ஷனா, தன்னுடைய நகை லாக்கர் சாவி பேட்டர்ன் இல்லை என்றும் என் லாக் கொண்டது என்றும், அதை திறக்க கூடிய எண் தனக்கும் கணவருக்கும் மட்டுமே தெரியும் என கூறியுள்ளார். எனவே இந்த சம்பவத்தை தர்ஷனா கூடவே இருந்த நண்பர்கள் அல்லது உறவினர்கள் செய்தார்களா என்கிற சந்தேகமும் எழுந்துள்ளது . மேலும் இந்த வழக்கில் திடீர் திருப்பமாக, ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் நகை திருட்டு வழக்கில் சிக்கிய டிரைவர் வெங்கடேஷ் பெயரும் அடிபடுகிறது. வெங்கடேஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்திடம் டிரைவராக சேருவதற்கு முன்பு, விஜய் யேசுதாஸ் வீட்டில் தான் பணியாற்றியுள்ளார். அதே போல் விஜய் யேசுதாஸ் வீட்டில் திடீர் என ட்ரைவர் வேண்டும் என அழைப்புகள் வந்தாலும் அங்கு சென்று வருவதை வழக்கமாக வைத்திருந்தார்.இதனால் , இந்த திருட்டு சம்பவத்திலும் இவருக்கு தொடர்பு இருக்குமா? என்கிற சந்தேகம் எழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதே போல்… கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு விஜய் யேசுதாஸ் வீட்டில் வேலை செய்த பெண், வேலைய விட்டு நின்று விட்டதால், அவரிடமும் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

What do you think?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

ரஜினிகாந்தும் LCU வில் இணைந்தார் | Rajinikanth also joined LCU

ரெயில் விபத்து காட்சி…. சிங்கிள் ஷாட் – வெற்றிமாறன் அசத்தல் | Train accident scene… single shot