விஜய் செய்த உதவியால் திணறி போன ராகவா லாரன்ஸ்
இன்றைய காலகட்டத்தில் பிரபலங்கள் என்று சொல்லிக் கொள்ளும் பல பேரும் அவர்கள் செய்யும் சின்ன உதவிகளை கூட உடனே போட்டோ எடுத்து சமூக வலைத்தளங்களில் போட்டு பெயர் வாங்கிக் கொள்கின்றனர். லைக்ஸ்காகவும், கமெண்ட்ஸ்க்காகவும் சேவைகளை செய்வது போல் காட்டிக் கொள்கின்றனர்.ஆனால் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் பல ஹீரோக்கள் அவர்கள் செய்யும் உதவிகளை எந்த ஒரு சுயலாபத்திற்காகவும் விளம்பரப்படுத்துவது இல்லை. அவர்களால் பயனடைந்தவர்கள் வெளியில் வந்து சொல்லும் வரை யாருக்கும் இவர்கள் செய்யும் உதவி தெரியாது. நடன இயக்குனர், மற்றும் நடிகராக இருக்கும் ராகவா லாரன்ஸ் நடிப்பில் சமீபத்தில் ருத்ரன் திரைப்படம் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியின் போது தான் லாரன்ஸ் விஜய் பற்றி பேசியிருக்கிறார். இவர் உடல் ஊனமுற்ற குழந்தைகள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவி செய்யும் வகையில் டிரஸ்ட் நடத்தி வருவது அனைவரும் அறிந்தது. தளபதி விஜய் இந்த டிரஸ்டுக்கு நிறைய உதவிகளை செய்திருக்கிறாராம். மேலும் லாரன்ஸ்ஸின் டிரஸ்ட்டை சேர்ந்த குழந்தைகள் விஜய்யின் படங்களை பார்க்க ரொம்பவே ஆசைப்படுவார்களாம். இது பற்றி ஒரு முறை தளபதியிடம் சொன்னபோது அந்த குழந்தைகளுக்காக மட்டுமே தனி காட்சி ஏற்பாடு பண்ணிக் கொடுத்திருக்கிறார்.
GIPHY App Key not set. Please check settings