விஜய் என்னுடன் பேசாத நாளே கிடையாது – மனோபாலா
நடிகர் மனோபாலா கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அவரது வீட்டில் காலமானார். அவரது உடலுக்கு விஜய் உட்பட பல முன்னணி சினிமா நட்சத்திரங்கள் அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி இருக்கிறார்கள். இன்று இறுதி ஊர்வலம் முடிந்து மதியம் சென்னை வளசரவாக்கத்தில் இருக்கும் மின் மயானத்தில் மனோபாலா உடல் தகனம் செய்யப்பட்டு இருக்கிறது. இதற்கு முன்பு நடிகர் மனோபாலா அளித்த ஒரு பேட்டியில் தான் விஜய் உடன் எவ்வளவு நெருக்கம் என பேசி இருக்கிறார்.”விஜய்யை introvert என எல்லோரும் சொல்வார்கள். அவர் என்னிடம் பேசாத நாளே கிடையாது. அந்த அளவுக்கு வெளிப்படையாக என்னிடம் பேசுவார். அண்ணன் அண்னன் என உசுரை விடுவார் விஜய்.””சாயங்காலம் வீட்டுக்கு அழைப்பார். என் காரை அவரது வீட்டுக்கு உள்ளே சென்று நிற்கும் அளவுக்கு சொல்லி வைத்திருப்பார். போன உடன் என்ன சாப்பிடுறீங்க என்று கேட்பார். தோசை நானே தான் போட்டு தருவேன் என சொல்லி போட்டு கொடுப்பார்.””விஜய் படங்களில் ஒரு சீனாவது நான் இருக்க வேண்டும் என சொல்லி கொண்டிருபார்என மனோபாலா கூறி இருக்கிறார்.
GIPHY App Key not set. Please check settings