வருமான வரி அதிகாரிகளை விரட்டியடித்த திமுகவினர்
மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரரின் வீடுகள் மற்றும் அரசு ஒப்பந்ததாரர்களுக்கு சொந்தமான 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்
தற்போது மின்சாரத் துறை அமைச்சராக பதவி வகிக்கும் செந்தில் பாலாஜி, கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கித் தருவதற்கு லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக சிறப்பு விசாரணை குழுவை அமைத்து செந்தில் பாலாஜி மீதான பண மோசடி வழக்கை விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித் துறையினர் திடீரென சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
கரூரில் திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் வருமான வரி சோதனையை அதிகாரிகள் நிறுத்தினர், சோதனைக்கு வந்த அதிகாரிகளை திமுகவினர் தடுத்ததால் பாதுகாப்பு கேட்டு அவர்கள் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். கரூரில் 22 இடங்களில் சோதனை நடைபெற்று வரும் நிலையில், அதில் 9 இடங்களில் சோதனை நடைபெறவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
அதிகாரிகளின் கார்களை திமுகவினர் அடித்து நொறுக்கினர்.
GIPHY App Key not set. Please check settings