in

வருமான வரித்துறை சோதனை புதிதல்ல கெத்து காட்டும் செந்தில் பாலாஜி | Senthil Balaji

https://youtu.be/1LEKQ2oldMc%5B/embed%5D

வருமான வரித்துறை சோதனை புதிதல்ல கெத்து காட்டும் செந்தில் பாலாஜி

இன்று காலை முதல் அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் வீடு, அவர்களது உறவினர்கள் என பல்வேறு இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். இந்த சோதனை குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து தனது விளக்கத்தை அளித்து வருகிறார்.

அவர் கூறுகையில், வருமானவரித்துறை சோதனை எனது சகோதரர்கள் இல்லம், எனது உறவினர்கள் இல்லம் என அவர்களுக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்த சோதனை குறித்து திமுக சார்பில் கழக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அவர்கள், முதல்வரின் வழிகாட்டுதலிடன்படி விளக்கம் அளித்துள்ளார். அதற்கு நன்றி.என குறிப்பிட்டார்.

மேலும் , கரூரில் நடந்த விரும்பத்தகாத செயல்கள் (சிலர் அங்கிருந்த வாகனங்களை சேதப்படுத்தினர்) குறித்து விசாரிக்க உள்ளோம். வருமான வரித்துறை சோதனை என்பது எங்களுக்கு புதியதல்ல. ஏற்கனவே சட்டமன்ற தேர்தல் சமயம் இறுதி பிரச்சாரத்தின் போது, வருமான வரிசோதனை மூலம் இறுதி பிரச்சாரத்தை முடக்க நினைத்தார்கள். என்னை நேரில் அழைத்தார்கள். நான் வர மறுத்தேன் என குறிப்பிட்டார்.

இன்று நடைபெறும் பெரும்பாலான இடங்களில் அவர்கள் ஏற்கனவே வருமான வரியை முழுதாக செலுத்துபவர்கள். அங்கு தான் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று கொண்டிருக்கிறது. அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நான் கூறிவிட்டேன். தற்போது அந்த பகுதியில், நிர்வாக ஆட்கள் யாரும் இல்லை. சோதனை முழுதாக நிறைவு பெற்ற பின்னர் முழுதாக விளக்கம் தருகிறேன் என கூறினார் அமைச்சர் செந்தில் பாலாஜி.

மேலும், எனது தம்பி வீட்டில் காலையில் அனைவரும் உறங்கி கொண்டிருக்கும் வேளையில் அதிகாரிகள் வந்துள்ளனர். சற்று நேரம் இருந்திருந்தால் அவர்களே வந்து கதவை திறந்து இருப்பார்கள். அதனை விடுத்து சில அதிகாரிகள் வீட்டில் யாரும் இல்லை என கதவை திறப்பதற்கு முன்னர் வீட்டினுள் ஏறி குதித்துள்ளார். அது பற்றி விசாரிக்க வேண்டியுள்ளது என குறிப்பிட்டார். மேலும் , இன்று ஒரு 40க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை என எனக்கு தெரிய வந்துள்ளது எனவும் விளக்கம் அளித்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி.

What do you think?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

திமுகவுக்கு அண்ணாமலை கண்டனம் | Annamalai Speech

செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் | Senthil Balaji