வடிவேலு குடிப்பதற்காக செய்யும் தில்லாலங்கடி வேலைகள் – பிரபல நடிகர் open talk
தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் மீசை ராஜேந்திரன். இவர் தற்போது யூடியூப் சேனல்களில் சினிமா குறித்தும், பல நடிகர்கள் குறித்தும் பேசி வருகிறார்.அந்த வகையில் ஒரு யூடியூப் சேனலில் அளித்த பேட்டியில் நடிகர் வடிவேலு குறித்து பல விஷயங்களை கூறியுள்ளார்.அதில் அவர் “வடிவேலுவிற்கு பட வாய்ப்பு பறிபோக காரணம் அவருடைய செயல் தான். அவருடன் நான்கு படங்கள் நடித்திருக்கிறேன். படப்பிடிப்புக்கு சரியான நேரத்தில் வரமாட்டார்.
அதே போல, படப்பிடிப்பில் அனைவர் இடத்திலும் கடுமையாக நடந்து கொள்வார். திரையில் நீங்கள் பார்க்கும் வடிவேலுவிற்கும், செட்டில் இருக்கும் வடிவேலுவும் வேறுமாதிரியாக இருப்பார்கள்” என்று கூறினார்.மேலும் அவர் கூறுகையில், ” வடிவேலு குடிப்பதற்காக பல தில்லாலங்கடி வேலைகளை பார்த்து இருக்கிறார்.அதாவது, இவர் நடிக்கும் படத்தில் உதவியாளர், மேக்கப் டச்சப், கார் மற்றும் டிரைவர் என அனைவருக்கும் சேர்த்து தயாரிப்பாளரிடம் பத்தாயிரம் ரூபாய் என்று மொத்தமாக பேட்டா காசு வாங்குவார்.ஆனால், கொடுப்பது என்னவோ, 100, 200 என்று பிரித்து கொடுத்து கொடுத்துவிட்டு, மீதி பணத்தை ஆட்டைப்போட்டு அந்த பணத்தை குடித்தே காலி செய்துவிடுவார்.இது மட்டுமில்லை குடிப்பதற்காக பலவேலைகளை வடிவேலு செய்து இருக்கிறார்” என்று கூறியுள்ளார்.
GIPHY App Key not set. Please check settings