வடலூர் சத்திய தரும சாலையில் சன்மார்க்கக் கொடியேற்ற நிகழ்ச்சி.
வடலூர் சத்திய தரும சாலையில் சன்மார்க்கக் கொடியேற்ற நிகழ்ச்சி. கடலூர் மாவட்டம், வடலூரில் அமைந்துள்ள சத்திய தரும சாலையின் 157}ஆவது ஆண்டு விழா நேற்று தொடங்கியது. வள்ளலார் என்றழைக்கப்படும் ராமலிங்க அடிகளார் வடலூரில் 23.5.1867 அன்று சத்திய தரும சாலையை நிறுவினார். அன்றைய தினமே ஜீவகாருண்யத்தை உபதேசித்து அருளினார். மேலும், அன்றைய தினம் வள்ளலாரால் ஏற்றி வைக்கப்பட்ட அணையா அடுப்பு மூலம் ஜாதி, மத பேதமின்றி அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. சத்திய தரும சாலையின் 157}ஆவது ஆண்டு தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி, தரும சாலையில் அதிகாலை 5 மணியளவில் அகவல் பாராயணம் பாடப்பட்டது. தொடர்ந்து, காலை 7.30 மணியளவில் தரும சாலை வளாகத்தில் சன்மார்க்கக் கொடி ஏற்றப்பட்டது. இதையடுத்து வில்லுப்பாட்டு, சத், விசாரம், சொற்பொழிவு, அருட்பா இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவையொட்டி தரும சாலையில் உள்ள வழிபாட்டுக் கூடம் மலர் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. விழாவில் இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் சு.மோகனசுந்தரம், உதவி ஆணையர் ஆர்.சந்திரன் மற்றும் சன்மார்க்க அன்பர்கள், பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை சபை நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
GIPHY App Key not set. Please check settings