‘லியோ’ படத்தில் தளபதிக்கு தந்தை இவர்தானாம்.. வெளியான அப்டேட்!
தளபதி விஜய் தற்போது நடித்து வரும் ‘லியோ’ படத்தில் அவரின் தந்தை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ள பிரபலம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. கடந்த ஆண்டின் டாப் ஹிட் அடித்த ‘விக்ரம்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கி வருவதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு, விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாது அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலிருந்து அதிகமாக உள்ளது. அடுத்த மாதம் இந்த படத்தின் கிளைமேக்ஸ் காட்சி ஹைதராபாத்தில் படமாக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் ஒரு கேங்ஸ்டார் படமாக எடுக்கப்பட்டு வரும் நிலையில் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. அந்த வகையில் பாலிவுட் நடிகரான சஞ்சய் தத், கேங் ஸ்டார் கதாபாத்திரத்தில் மட்டும் இன்றி, ‘லியோ’ படத்தில், விஜயின் தந்தையாகவும் நடித்து வருகிறாராம்..இப்படத்தில் அப்பா மகன் கெமிஸ்ட்ரி, துப்பாக்கி படத்திற்கு பின்னர் ‘லியோ’ படத்தில் அதிகமாக பேசப்படும் என எதிர்பார்க்கின்றனர் ரசிகர்கள்.
GIPHY App Key not set. Please check settings