in

லியோவில் நடிக்கும் கிரிக்கெட் பிரபலம்

லியோவில் நடிக்கும் கிரிக்கெட் பிரபலம்..

Leo (லியோ) லியோவில் பிரபலங்களின் லிஸ்ட் நீண்டுகொண்டே செல்ல இப்போது இன்னொரு பிரபலம் படத்தில் இணைந்திருக்கிறார் பெரிய நட்சத்திர பட்டாளமே களமிறங்கியிருக்கிறது. இதன் டைட்டில் டீசர் வெளியாகி அமோக வரவேற்பைப் பெற்றது. மேலும் படத்தில் ஒரு பாடலுக்காக 2000 டான்ஸர்கள் பயன்படுத்தப்படவிருக்கிறார். அதேபோல், படத்தில் சிங்கத்திற்கு முக்கியமான ரோல் ஒன்று இருக்கிறது. எனவே அதனை உருவாக்க சிஜிக்கு மட்டும் 15 கோடி ரூபாய் செலவு செய்யவிருப்பதாகவும் பேச்சு எழுந்தது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் பிரபல கிரிக்கெட் வர்ணனையாளரான ப்ரதீப் முத்து இணைந்திருப்பதாக கூறப்படுகிறது. அவர் தனது ட்விட்டர் பயோவில் இதுவரை தான் நடித்த மீசைய முறுக்கு, வீட்ல விசேஷம் உள்ளிட்ட படங்களுடன் லியோ படத்தையும் இணைத்திருக்கிறார். இதன் காரணமாக அவர் லியோவில் நடிக்கிறார் லியோ படத்தின் ஷூட்டிங்கை ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் முடிக்க திட்டமிட்டிருக்கிறாராம் லோகேஷ் கனகராஜ். ஷூட்டிங்கை முடித்துவிட்டு குட்டி ரெஸ்ட் எடுக்கும் விஜய் ஜூலை மாதத்தில் படத்துக்கான டப்பிங்கை பேசவிருக்கிறார் என கூறப்படுகிறது.

What do you think?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

புது பிசினஸ் தொடங்கிய காஜல் அகர்வால் 👌👌👌👌 வாழ்த்திய கணவர்….. வைரலாகும் போட்டோஸ்

லிப்ட் கொடுத்தவரை வம்பில் மாட்டிவிட்ட நடிகர்அமிதாப் பச்சன்