லால் சலாம் shooting cancel – மும்பாய் இருந்து கோபமாக திரும்பிய ரஜினிகாந்த்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இப்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.. இந்த சூழலில் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்திலும் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.சமீபத்தில் இந்த படத்தின் போஸ்டர் வெளியாகி இணையத்தில் கேலி, கிண்டலுக்கு உள்ளானது. அதாவது பிரியாணி கடை விளம்பரத்திற்கு உள்ளது போல ரஜினியின் போஸ்டரை வெளியிட்டு ஐஸ்வர்யா அசிங்கப்படுத்தி விட்டார் என ரசிகர்கள் கொந்தளித்தனர்..மேலும் லால் சலாம் படத்திற்காக கிட்டத்தட்ட 8 நாட்கள் மும்பையிலேயே ரஜினி தங்கி இருந்தார். இந்த படப்பிடிப்புக்காக தனது பிசியான வேலைகள் எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு மகளுக்காக ரஜினி மும்பை சென்றிருந்தார். ஆனால் அங்கு ரஜினி மூன்று நாட்கள் மட்டும் தான் படப்பிடிப்பில் கலந்து கொண்டாராம்.மற்ற நாட்களில் எல்லாம் சும்மாவே இருந்துள்ளாராம். அதாவது லால் சலாம் படத்தில் நடிக்கும் கோ ஆர்டிஸ் மற்ற நாட்களில் வரவில்லையாம். இதனால் கிட்டத்தட்ட ஐந்து நாட்கள் ரஜினி மும்பையில் சும்மாவே இருந்துள்ளார். தன்னுடைய மகள் என்பதால் வேறு எதுவும் செய்ய முடியாமல் கடும் கோபத்தில் மும்பையில் இருந்து சென்னை புறப்பட்ட வந்து விட்டாராம். மேலும் இனி எல்லாவற்றையும் பக்காவாக ரெடி செய்து விட்டு தன்னை கூப்பிடுமாறு மகளிடம் கரராக சொல்லி உள்ளாராம் ரஜினி.
GIPHY App Key not set. Please check settings