லண்டன் மேயர் பதவியை மீண்டும் கைப்பற்றுகிறார் சாதிக் கான்?

 

 

லண்டன் நகர மேயர் தேர்தல் வியாழக்கிழமை நடைபெற்ற நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. மதியம் 1.30 மணி வரையிலான நிலவரப்படி, தொழிலாளர் கட்சி வேட்பாளரும், தற்போதைய மேயருமான சாதிக் கான் 38 சதவீத வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி வேட்பாளர் ஷான் பெய்லி 37 சதவீத வாக்குகள் பெற்று கடும் போட்டியை உருவாக்கி வருகிறார்.

வாக்கு எண்ணிக்கை தொடங்கியபோது ஷான் பெய்லி முன்னிலையில் இருந்தார். கன்சர்வேடிவ் கட்சி செல்வாக்கு பெற்று திகழும் இடங்களில் வாக்கு எண்ணிக்கை துரிதமாக நடைபெற்றதால், அவர் முன்னிலை வகித்ததாக கூறப்பட்டது. பின்னர், 11.30 மணி வரையிலான நிலவரப்படி பெய்லி 40 சதவீத வாக்குகளும், சாதிக் 35 சதவீத வாக்குகளும் பெற்றிருந்தனர்.

லண்டன் மேயர் தேர்தல் இறுதி முடிவு சனிக்கிழமை மாலை அதிகாரபூர்வமாக வெளியாகிறது.

தொழிலாளர் கட்சியின் கோட்டையாக கருதப்பட்ட ஹார்டில்பூல் எம்பி தொகுதியில், கன்சர்வேடிவ் கட்சி 7 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Add your comment

Your email address will not be published.

2 × two =