ராஜா ராணி 2 சீரியலில் விலகியதற்கான காரணத்தை கூறிய அர்ச்சனா
விஜய் தொலைக்காட்சியில் பிரவீன் பென்னட் இயக்க ஒளிபரப்பாகி வந்த தொடர் ராஜா ராணி.
சித்து மற்றும் ஆல்யா மானசா முக்கிய வேடத்தில் நடிக்க தொடங்கியது,பின் பிரசவ நேரத்தில் ஆல்யா மானசா சீரியலை விட்டே விலகினார். அதன்பின் தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்துவந்த அர்ச்சனா திடீரென வெளியேறி இருந்தார்.ஆனால் அவர் வெளியேறிய காரணமே இதுவரை தெரியாமல் இருந்தது.ராஜா ராணி 2 தொடரே முடிந்துள்ள நிலையில் அதில் இருந்து வெளியே வந்ததற்கான காரணத்தை ஒரு பேட்டியில் கூறியுள்ளார் அர்ச்சனா.1 வருடத்திற்கு மேல் அந்த குழுவுடன் பணிபுரிந்துள்ளேன், எனக்கு அவர்களுடனே பயணிக்க தோன்றவில்லை, புதியதாக கற்றுக்கொள்ள வேண்டும் என தோன்றியது.சீரியலில் இருந்து வெளியேறிய பிறகு பாடல் ஆல்பங்கள் நடித்திருக்கிறேன். தற்போது டிமாண்டி காலணி 2 படத்தில் கமிட்டாகி இருக்கிறேன், இன்னும் சில படங்களுக்கான பேச்சு வார்த்தை நடக்கிறது.அதில் இருந்து வெளியே வந்த பிறகு தான் என்னால் நிறைய விஷயங்கள் கற்றுகொள்ள முடிந்தது என கூறியுள்ளார்.
GIPHY App Key not set. Please check settings